பொது செய்தி

இந்தியா

உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையை மூடுகிறது இந்தியா

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்தோ திபெத் போலீஸ் படையால் தெற்கு டில்லியில், 1.7 கி.மீ நீளம், 700 மீட்டர் அகலத்திற்கு உருவாக்கப்பட்ட சர்தார் பட்டேல் கொரோனா சிகிச்சை மையத்தை மூட உள்ளனர்.கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோ திபெத் போலீஸ் படையை கொண்டு மத்திய அரசு இந்த கொரோனா சிகிச்சை மையத்தை அவசர காலத்திற்கு தொடங்கியது. அந்த சமயத்தில் கொரோனாவின் பிடியில் நாடும், தலைநகரும் இருந்தது. அனைத்து
ITBP, Close, CovidCare_Centre, World's Largest, கொரோனா, சிகிச்சை, மையம், டில்லி,

புதுடில்லி: இந்தோ திபெத் போலீஸ் படையால் தெற்கு டில்லியில், 1.7 கி.மீ நீளம், 700 மீட்டர் அகலத்திற்கு உருவாக்கப்பட்ட சர்தார் பட்டேல் கொரோனா சிகிச்சை மையத்தை மூட உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோ திபெத் போலீஸ் படையை கொண்டு மத்திய அரசு இந்த கொரோனா சிகிச்சை மையத்தை அவசர காலத்திற்கு தொடங்கியது. அந்த சமயத்தில் கொரோனாவின் பிடியில் நாடும், தலைநகரும் இருந்தது. அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்தன. இந்த மையம் 20 கால்பந்து மைதானம் அளவிற்கு பரந்து விரிந்த பகுதியாகும். செப்டம்பர் மாத நிலவரப்படி 4000 படுக்கைகள் ஆக்சிஜன் வழங்கக் கூடிய வசதியுடன் இருந்தன. 75 ஆம்புலன்ஸ்களை பிரத்யேகமாக கொண்டிருந்தது.


latest tamil news


கொரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்த சமயத்தில் சர்தார் பட்டேல் சிகிச்சை மையத்தில் 2000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டிசம்பருக்கு பின் டில்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது. அதனால் சர்தார் பட்டேல் மையத்திலும் நோயாளிகள் எண்ணிக்கை 59 ஆக குறைந்தது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் டிஸ்சார்ஜ் ஆனதும் இம்மருத்துவமனையை மூடுவது என இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை முடிவெடுத்துள்ளது. அதன்படி உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை ஒரு வாரத்தில் மூடப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-பிப்-202106:04:01 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமை. இது இந்தியாவின் தொழில் நுட்பம், மருத்துவ முன்னேற்றத்தை காண்பிக்கிறது. மற்ற நாடுகள் பொறாமைப்படும் அளவுக்கு. இப்போது பாப்புவும் வயிறு எரிகிறார்.
Rate this:
Cancel
24-பிப்-202103:58:14 IST Report Abuse
ஆப்பு இந்தியா கொரோனா டூரிசம் ஆரம்பிச்சு வெளிநாட்டு நோயாளிகளை குணப்படுத்தலாம். துட்டுக்கு துட்டு. நல்க பேரும் கிடைக்கும்.
Rate this:
Cancel
24-பிப்-202103:58:14 IST Report Abuse
ஆப்பு இந்தியா கொரோனா டூரிசம் ஆரம்பிச்சு வெளிநாட்டு நோயாளிகளை குணப்படுத்தலாம். துட்டுக்கு துட்டு. நல்ல பேரும் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X