புதுடில்லி: பாகிஸ்தான் பிரதமர் இலங்கை பயணம் மேற்கொள்ள இருப்பதை அடுத்து இந்தியாவிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.

பாக்., கோரிக்கை
பாகிஸ்தான் பிரதமர் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இந்தியா வழியாக இலங்கை செல்ல இந்தியாவின் வான்வழியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் படி பாக்., அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா அனுமதி
இதற்காக இந்தியாவில் உள்ள பாக்.,தூதரகம் வழியாக இந்திய அதிகாரிகளிடம் கடந்த 10 தினங்களுக்கு முன்னதாக கோரிக்கை மனு அளித்தது. இதனை பரிசீலித்த இந்திய அதிகாரிகள், இந்திய வான்வழியை பாக்., பிரதமரின் விமானம் பயன்படுத்திகொள்வதற்கான அனுமதியை இன்று (23ம் தேதி ) வழங்கினர்.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வாபஸ்பெற்றது. தொடர்ந்து காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாக்.,அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
அதன்ஒரு கட்டமாக இந்தியாவில் இருந்து புறப்படும் எந்த ஒரு விமானமும் பாக்., வான்வழியை பயன்படுத்திக்கொள்ள கூடாது என தடலாடியாக அறிவித்தது. இதன் காரணமாக இந்திய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கடந்த 2019ம் ஆண்டு செப்., -ல் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த போது மாற்றுவழி பயன்படுத்த நேர்ந்தது.

அதே2019-ம் ஆண்டு செப்.,-ல் பிரதமர் மோடி யுஎன்ஜிஏ கூட்டத்தில் கொள்ள செல்ல இரு்நத போதும் இரண்டாவது முறையாக 2019 அக்.,-ல் சவுதிஅரேபியாவிற்கு அரசு முறை பயணமாக செல்ல இருந்த போதும் ஏர்இந்தியா விமானத்திற்கு பாக்., அனுமதி மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE