அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 23, 2021
Share
காற்று மாசுபாட்டால் உயிரிழப்புகொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் கடந்தாண்டு உலகில் 5 நகரங்களில் காற்று மாசுபாட்டால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என 'கிரீன்ஸ்பேஸ் தென்கிழக்கு ஆசியா' அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 28 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டதில் இந்தியாவின் டில்லி, மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டி, பிரேசிலின் சாவ் பவ்லோ, சீனாவின்


காற்று மாசுபாட்டால் உயிரிழப்பு



கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் கடந்தாண்டு உலகில் 5 நகரங்களில் காற்று மாசுபாட்டால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என 'கிரீன்ஸ்பேஸ் தென்கிழக்கு ஆசியா' அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 28 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டதில் இந்தியாவின் டில்லி, மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டி, பிரேசிலின் சாவ் பவ்லோ, சீனாவின் ஷாங்காய், ஜப்பானின் டோக்கியோவில் காற்று மாசுபாட்டால் 1.60 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
ரூ.6.16 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்




முதல் பெண் நியமன எம்.பி.,



பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ராஜ்யசபாவில் நியமன எம்.பி., க்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். அதிகபட்சம் 12 பேரை நியமிக்கலாம். நாட்டின் முதல் பெண் நியமன எம்.பி., யாக பதவி வகித்தவர் ருக்மிணி தேவி அருண்டேல். இவர் 1904 பிப்.29ல் மதுரையில் பிறந்தார். நடனம், நடன இயக்குனர், பரதநாட்டியக் கலைஞர். விலங்குகள் நல ஆர்வலராகவும் இருந்தார். பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். 1952 ஏப்.3 - 1962 ஏப்.2 வரை நியமன ராஜ்யசபா எம்.பி., ஆக பணியாற்றினார். 1986 பிப். 24ல் மறைந்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X