அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டி:பா.ஜ.,மாநில தலைவர் முருகன் தகவல்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
திருநெல்வேலி:அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதை மாநில தலைவர் முருகன் உறுதிப்படுத்தினார். தமிழகம் முழுவதும் பா.ஜ.,போட்டியிடும் தொகுதிகளில் மாநில தலைவர் எல்.முருகன் நேரடியாக சென்று கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு, பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வருகிறார். திருநெல்வேலி தொகுதியில்

திருநெல்வேலி:அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதை மாநில தலைவர் முருகன் உறுதிப்படுத்தினார்.latest tamil newsதமிழகம் முழுவதும் பா.ஜ.,போட்டியிடும் தொகுதிகளில் மாநில தலைவர் எல்.முருகன் நேரடியாக சென்று கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு, பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வருகிறார். திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.,மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால், இன்று தச்சநல்லுாரில் இருந்து ஜங்ஷன் வரையிலும் 500 டூவீலர்களில் தொண்டர்கள் பங்கேற்ற பேரணியை துவக்கிவைத்தார்.


தேர்தல் பணி துவக்கம்


செய்தியாளர்களிடம் கூறுகையில், 234 தொகுதிகளிலும் பா.ஜ.,தேர்தல் பணி துவக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். வரும் 25ல் பிரதமர் மோடி கோவைவருகிறார். 28 ல் விழுப்புரத்தி்ற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். தமிழகத்தில் இரட்டை இலக்கு எண்ணிக்கையில் சட்டமன்றத்தில் பெறும் இலக்கில் உள்ளோம்.
கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும். தேர்தல் நெருங்கிவிட்டதால் மகளிர் அணி மாநாடு, விவசாய அணி மாநாடுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இனி தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் தரப்படும். தமிழகத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு போதிய அளவு வந்துகொண்டுதான் இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மையத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து நிர்வாக இயக்குநர் நியமிக்கப்பட்டிருப்பது குறையாக பாரக்கவேண்டாம். நம்மவர்கள் மற்ற மாநிலங்களில் நியமிக்கப்படுகிறார்கள்.


latest tamil news
தொகுதியின் ஹீரோ


தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமையுமா என கேட்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள். திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்தான் தொகுதியின் ஹீரோ, அமைச்சராக இருந்த அவர் பல்வேறு நலதிட்டங்களை செய்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் அறிமுகமானவர். அவற்றை சுட்டிக்காட்டி தேர்தல் பணியாற்றுவார். இருப்பினும் கூட்டணி முடிவு செய்யும் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார்.

திருநெல்வேலியில் பா.ஜ.,சார்பில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தச்சநல்லுார் வரம்தரும்பெருமாள் கோயிலில் பூஜையுடன் இருசக்கர வாகன பேரணி நடந்தது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் வளாகத்தில் கட்சி தேர்தல் அலுவலகத்தை நேற்று மாநில தலைவர் எல்.முருகன் துவக்கிவைப்பதாக இருந்தது.
இருப்பினும் நேரம் சரியில்லை எனவும், அ.தி.மு.க.,உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தனியே போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியதால் அவர்களை அழைத்து இன்னொரு நாளில் கட்சி அலுவலகம் திறப்போம் எனவும் தெரிவித்தனர்.

திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.,சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால் இருசக்கர வாகன பேரணியை மாநில தலைவர் எல்.முருகன் துவக்கிவைத்தார்.
திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.,வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கட்சி அலுவலக திறப்பு விழாவில் இருசக்கர வாகன பேரணியால் களைகட்டியது தொகுதி
திருநெல்வேலியில் பா.ஜ.,வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
24-பிப்-202108:54:02 IST Report Abuse
Elango நோட்டாவிடம் தோற்று போக நாங்க ரெடி நீங்க ரெடியா என்று முருகன் கிளம்பி விட்டார் ... சாமி பெயரையும்,மதத்தையும் வச்சு அரசியல் பன்றவன் நீண்ட காலம் நிலைத்து வாழ முடியாது...அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொன்றுவிடும்...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24-பிப்-202108:19:12 IST Report Abuse
VENKATASUBRAMANIAN முதலில் மோடி செய்த நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். திமுக அந்த அளவுக்கு மோடியின் பெயரை கெடுத்து வைத்துள்ளனர். அதை முதலில் உடைக்க வேண்டும். அப்புறம் தானாகவே உங்களுக்கு ஒட்டு விழும். இதுதான் வட இந்தியாவில் நடந்தது. இங்கு மொழி பிரச்சினை யை அதற்காகத்தான் உருவாக்கியுள்ளனர். இந்தி தெரிந்து இருந்தால் இந்நேரம் எல்லோரையும் சென்று அடைந்து இருக்கும். இதுதான் திமுகவின் வெற்றி ரகசியம்.
Rate this:
Cancel
24-பிப்-202107:20:28 IST Report Abuse
தமிழ் இதுதான் இவனுங்க கூட்டணி வைக்கிற லட்சணம். சரியான அவசரக்கூடுக்கயா இருப்பார் போல. அதுக்குள்ள என்ன அவசரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X