சீனா கடந்த சில ஆண்டுகளாக அண்டை நாடுகளுடனும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு தொடர் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதனை அடுத்து அமெரிக்காவால் குவாட் நாடுகள் கூட்டம் கூட்டப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், குவாட் நாடுகளை ஒன்றிணைப்பதில் மும்முரமாக இருந்தார்.

அப்போது அமெரிக்க மாகாண செயலாளராக இருந்த மைக் பாம்பியோ, குவாட் நாடுகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். சீனாவின் ஆதரவு இல்லாமலேயே பிற ஆசிய நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு தங்கள் நாட்டு மொத்த கொள்முதல் உற்பத்தியை பெருக்க முயலவேண்டும். இதற்கு குவாட் நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்பது இந்த அமைப்பின் விதிகளில் ஒன்று.
குவாட் நாடுகள் சந்திப்பு
சமீபகாலமாக சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இவற்றிலிருந்து குவாட் நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் முதல் குவாட் நாடுகள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய அமெரிக்கா செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இந்தோ பசிபிக் பகுதியில் பொருளாதாரம், வர்த்தகம், ராணுவ பலம் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் பங்கு அத்தியாவசியமானது.
சீனாவின் பொருளாதார ஒத்துழையாமை, கருத்துப் பரிமாற்றம் இன்மை, வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுவது, சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவது உள்ளிட்ட செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே குவாட் நாடுகள் இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழு ஒத்துழைப்பு
ஜின்ஜியாங், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் மனித உரிமை மீறல் நடக்கும்போது அதனைத் தட்டிக்கேட்கவும் இதேபோல உலகில் எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அங்கு குவாட் நாடுகள் குரல்கொடுக்கும். கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்ற 3-வது குவாட் நாடுகள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். குவாட் நாடுகள் எடுக்கும் முடிவுகளுக்கு இந்தியா தனது முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE