சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்., பெண் தலைவர்கள் 'குடுமிப்பிடி' சண்டை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சென்னிமலை:சென்னிமலை அருகே, பெண் ஊராட்சி தலைவர், துணை தலைவர், தலைமுடியை பிடித்து சண்டை போட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி,35; இவரின் கணவர் விஜயகுமார், தி.மு.க., நிர்வாகி. அ.தி.மு.க.,வை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சத்யபிரியா, 31, துணை தலைவராக உள்ளார்.வெவ்வேறு கட்சி என்பதால், நிர்வாகம் செய்வதில், ஏழாம்

சென்னிமலை:சென்னிமலை அருகே, பெண் ஊராட்சி தலைவர், துணை தலைவர், தலைமுடியை பிடித்து சண்டை போட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது

.ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி,35; இவரின் கணவர் விஜயகுமார், தி.மு.க., நிர்வாகி. அ.தி.மு.க.,வை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சத்யபிரியா, 31, துணை தலைவராக உள்ளார்.வெவ்வேறு கட்சி என்பதால், நிர்வாகம் செய்வதில், ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இதனால், குடிநீர் பிரச்னை உட்பட பல செலவுகள் செய்வதில், சிக்கல் நீடிக்கிறது.

இருவரும் முரண்டு பிடிப்பதால்,மூன்று நாட்களாக குடிநீர் கிடைக்காமல்,மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், சத்யபிரியா வீட்டுக்கு, தங்கமணி நேற்று முன்தினம் சென்றார். 'அலுவலகத்துக்கு ஏன் வருவதில்லை, கையெழுத்து போடுவதில்லை' என கேள்வி எழுப்பியுள்ளார்.அங்குள்ள மக்களிடம், தண்ணீர் வராமல் போக, சத்யபிரியா தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், தகராறாக மாறியது. ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து, மல்லுக்கட்டினர். தகாத வார்த்தைகள் பேசியபடி நீடித்த குடுமிப்பிடி சண்டை, ஐந்து நிமிடங்கள் வரை நீண்டது.அங்கு குவிந்த மக்கள், இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, இருவரும் சென்னிமலை போலீசில், புகார் தெரிவித்து உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர். இந்த குடுமிப்பிடி சண்டை, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X