சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

நில அபகரிப்புக்கு துணை போகும் அதிகாரிகள்!

Added : பிப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நில அபகரிப்புக்கு துணை போகும் அதிகாரிகள்!''இந்த அநியாயத்தை கேட்டேளோ... உரிமம் வழங்க, 6 லட்சம் ரூபாய் கேக்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல டிரைவிங் லைசென்ஸ் வழங்க, அவ்வளவு கேட்க மாட்டாங்களே... விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''பத்திரப்பதிவுத் துறையில முத்திரைத்தாள் விற்பனைக்கு புதுசா, 800 பேருக்கு உரிமம்

டீ கடை பெஞ்ச்


நில அபகரிப்புக்கு துணை போகும் அதிகாரிகள்!



''இந்த அநியாயத்தை கேட்டேளோ... உரிமம் வழங்க, 6 லட்சம் ரூபாய் கேக்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல டிரைவிங் லைசென்ஸ் வழங்க, அவ்வளவு கேட்க மாட்டாங்களே... விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பத்திரப்பதிவுத் துறையில முத்திரைத்தாள் விற்பனைக்கு புதுசா, 800 பேருக்கு உரிமம் வழங்க போறா... பலகட்ட போராட்டத்துக்கு பிறகு, இதுக்கு நிறைய பேர் விண்ணப்பிச்சிருக்கா ஓய்...

''ஒவ்வொரு பதிவு மாவட்டத்துலயும், தனி குழு அமர்த்தி, இதுக்கு நேர்காணல் நடத்தணும்... இதுல பல மாவட்ட பதிவாளர்கள், விண்ணப்பத்தை வாங்கவே, வசூல் வேட்டை நடத்திட்டா ஓய்...

''இப்ப, விண்ணப்பிச்சவாளுக்கு சில நாட்களா ஒரு போன் அழைப்பு வரது... அதுல பேசறவர், 'முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வேணும்னா, 6 லட்சம் ரூபாயோடு, அமைச்சர் குடியிருக்கற சென்னை, கிரீன்வேஸ் சாலைக்கு வாங்கோ'ன்னு கூப்பிடறார்...

''அமைச்சர் பெயர்ல நடக்கற இந்த வசூல் வேட்டையை எப்படி தடுக்கறதுன்னு தெரியாம, பதிவுத்துறை அதிகாரிகள் முழியா முழிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஈரோடு மாவட்டத்துல, காங்., கதையை முடிக்க, 'பிளான்' பண்ணியிருக்காங்க பா...''என்றார், அன்வர்பாய்.

'தி.மு.க.,வினரை சொல்லுதீரா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஆமாம்... மாவட்டத்துல இருக்கிற எட்டு தொகுதிகள்ல, மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு தொகுதியை, காங்., தரப்புல எதிர்பாக்கிறாங்க...

''ஆனா, அமைச்சர் செங்கோட்டையனின் கோபி தொகுதியை மட்டும், காங்கிரஸ் தலையில கட்ட, தி.மு.க.,வினர் திட்டமிடுறாங்க பா...

''செங்கோட்டையனை மீறி, காங்கிரஸ் ஜெயிக்கிறது குதிரை கொம்பு தான்... 'இந்த தேர்தல்ல தோத்துட்டா, ஈரோட்டுல காங்கிரஸ் கட்சியே காணாம போயிடும்'னு, தி.மு.க.,வினர் கணக்கு போடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''நில அபகரிப்பு கும்பலுக்கு துணை போறாங்க...'' என, கடைசி மேட்டருக்கு நுழைந்தார், அந்தோணிசாமி.

''எங்கவே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை, அம்பத்துார், மேனாம்பேடு பகுதியில வசிக்கிறவர், பொன் பாஸ்கரன்... இவருக்கு, மாதவரம் தாலுகா, சூரப்பட்டு கிராமத்துல, 11.20 ஏக்கர் நிலம் இருக்குதுங்க... இந்த நிலத்துல தனக்கும் பங்கு இருக்கிறதா, சிறுவள்ளூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் சொந்தம் கொண்டாடுறாருங்க...

''இது சம்பந்தமா, அம்பத்துார் போலீஸ்லயும், தாசில்தாரிடமும் பொன் பாஸ்கரன் புகார் குடுத்திருக்காரு... அவங்க, அதை கண்டுக்கலை... இதனால, பொன் பாஸ்கரன் நிலத்தின் சுற்றுச்சுவரை, ராவோட ராவா, சண்முகசுந்தரம் தரப்பு, ஜே.சி.பி., மூலமா இடிச்சு தள்ளிடுச்சுங்க...

''இந்த நில அபகரிப்பு பின்னணியில, தி.மு.க., - வி.சி., கட்சி புள்ளிகள் இருக்காங்க... இப்ப, இந்த கட்சி புள்ளிகள், ரெண்டு தரப்புக்கும் சமரசம் செய்து வைக்க, 25 லட்சம் ரூபாய் பேரம் பேசிட்டு இருக்காங்க... இதுக்கு, போலீசார், வருவாய் துறை தரப்பினர் உடந்தையா இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''சபாநாயகம், ராஜ்குமார் வந்தா, நாளைக்கு இதே நேரத்துக்கு வர சொல்லுங்க நாயர்...'' என்றபடி அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-பிப்-202114:08:17 IST Report Abuse
Anantharaman Srinivasan முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வேணும்னா, 6 லட்சம் ரூபாயோடு, அமைச்சர் குடியிருக்கற சென்னை, கிரீன்வேஸ் சாலைக்கு வாங்கோ'ன்னு கூப்பிடறார். அவ்விதம் அழைப்பை பெற்றவர் லஞ்சஒழிப்பு துறையை அணுக வேண்டும். அங்கேயும் கருப்பு ஆடு இருந்தால் ?
Rate this:
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
24-பிப்-202111:07:20 IST Report Abuse
chinnamanibalan நில அபகரிப்பு மட்டுமல்ல, கட்டப் பஞ்சாயத்தும் திமுகவினரின் கை வந்த கலை. அவரவர் சொத்துக்களை விழிப்புடன் இருந்தால் மட்டுமே இனி காப்பாற்றி கொள்ள முடியும்..
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-பிப்-202108:01:55 IST Report Abuse
அம்பி ஐயர் சபாநாயகம்.... ராஜ்குமார்.... ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே கட்டப்பஞ்சாயத்து.... வந்துட்டா அவ்வளவு தான் நாடு தாங்காது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X