பிப்., 24, 2015
மதுரையில், 1917-ல் பிறந்தவர், மாயாண்டி பாரதி. 10வது வரை மட்டுமே படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1935ல், 'ஜவஹர் வாலிபர் சங்கம்' எனும் இயக்கத்தைத் துவக்கி, இளைஞர்களை ஒன்று திரட்டி, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க செய்தார். பின், பொதுவுடமை கட்சியில் இணைந்து பணியாற்றினார்.திரு.வி.க., நடத்திய, 'நவசக்தி' பத்திரிகையில் துணை ஆசிரியராகவும், 'ஜனசக்தி, தீக்கதிர்' உள்ளிட்ட பத்திரிகையில், உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 15 புத்தகங்களை எழுதி உள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால், 13 ஆண்டுகளை சிறையில் கழித்தார். மதுரையில் நடந்த, கிரானைட் ஊழலை வெளிக் கொணரவும் காரணமாக இருந்தார்.எழுத்தாளர், தியாகி, ஊழல் எதிர்ப்புப் போராளி என, பன்முகம் உடையவர், 2015 பிப்., 24ம் தேதி, தன், 98வது வயதில் இயற்கை எய்தினார்.தியாகி மாயாண்டி பாரதி காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE