சிறிதும் நியாயமில்லை!
கொரோனாவால் வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், சமையல், 'காஸ்' விலையை உயர்த்தி, அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவது சிறிதும் நியாயமற்றது; தவறானது.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்.
தற்கொலைக்கு துாண்டுகிறார்!
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம், தரகர் போல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசுகிறார். அவர்களை தற்கொலை செய்துக் கொள்ளத் துாண்டுகிறார். கெஜ்ரிவாலால், விவசாயிகள் நிலை மோசமடைகிறது.
மீனாட்சி லேகி
எம்.பி., - பா.ஜ.,
நடிகராக முயற்சி!
காங்கிரஸ் எம்.பி., ராகுல், டிராக்டர் ஓட்டுவதன் வாயிலாக, நடிகராக முயற்சிக்கிறார். விவசாய விற்பனை ஒழங்குமுறை கூடம் தேவை என்றால், அதை கேரளாவில் செயல்படுத்தாதது ஏன் என, ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்.
பிரகலாத் ஜோஷி
பார்லி., விவகாரத் துறை அமைச்சர், பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE