புதுடில்லி:கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், 78 பேர் பலியாகி உள்ளனர். இதன்படி, தினசரி உயிரிழப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
பரிசோதனை
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 6.79 லட்சம் பேரிடம், பரிசோதனை நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் வாயிலாக, 10 ஆயிரத்து, 584 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது. இவர்களுடன், இதுவரை பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 10 லட்சத்து, 16 ஆயிரத்து, 434 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து, ஒரு கோடியே, ஏழு லட்சத்து, 12 ஆயிரத்து, 665 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 97.24 சதவீதமாக உள்ளது.கொரோனா தொற்றுக்கு, 1.47 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில், இவர்களின் விகிதம், 1.34 சதவீதம்.வைரஸ் பாதிப்பால், கடந்த, 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில், 18 பேர், கேரளாவில், 16; பஞ்சாபில், 15 பேர் உட்பட, 78 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைவோர் அதிகரிப்பால், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது.
இறப்பு விகிதம்
ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 463 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.42 சதவீதமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பால், 51 ஆயிரத்து, 806 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 466 ஆகவும், கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 299 ஆகவும் பதிவாகி உள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE