திரிணமுல் எம்.பி., மனைவியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோல்கட்டா:நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக, திரிணமுல் காங்., -- எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் கட்சியில் இருந்து
 திரிணமுல் எம்.பி., மனைவியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

கோல்கட்டா:நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக, திரிணமுல் காங்., -- எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்.பி.,க் கள், எம்.எல்.ஏ.,க்கள் என, அடுத்தடுத்து பலரும் விலகி பா.ஜ.,வில் இணைந்தனர்.இது திரிணமுல் காங்., கட்சியினர் இடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


சுரங்க முறைகேடு

இதற்கிடையே, திரிணமுல் காங்., -- எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு, நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கின் விசாரணை தொடர்பாக, சமீபத்தில் சி.பி.ஐ., 'நோட்டீஸ்' அனுப்பியது.இது, அக்கட்சியினருக்கு அடுத்த இடியாக அமைந்தது.

இதன்படி, கோல்கட்டாவின் தென்பகுதியில் உள்ள அபிஷேக் பானர்ஜி வீட்டிற்கு, நேற்று காலை சி.பி.ஐ., அதிகாரிகள் வந்தனர்.விசாரணைக்கு தயாராக இருந்த ருஜிராவிடம், இரு பெண் அதிகாரிகள், நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியதுடன், அவரது வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர்.விசாரணை காரணமாக, அபிஷேக் பானர்ஜி வீட்டின் அருகே, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, ருஜிராவின் சகோதரி மேனகா காம்பிரிடம், நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மம்தா வருகைகோல்கட்டாவின் தெற்கு பகுதியில் ஹரிஷ் முகர்ஜி சாலையில் எம்.பி., அபிஷேக் பானர்ஜி யின் வீடு உள்ளது. அவரது மனைவி ருஜிராவிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகள் வருவதற்கு சிறிது நேரம் முன், முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்தார். மருமகன் அபிஷேக் மற்றும் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த பின், அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X