உத்தரகண்ட் பேரிடர் 130 பேர் பலியா?

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சமோலி:உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன, 130 பேரை, இறந்தவர்களாக அறிவிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் சமோலி என்ற இடத்தில், கடந்த, 7ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நீர் மின் நிலையம் உட்பட, பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இந்த சம்பவத்தில், 68

சமோலி:உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன, 130 பேரை, இறந்தவர்களாக அறிவிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் சமோலி என்ற இடத்தில், கடந்த, 7ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நீர் மின் நிலையம் உட்பட, பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இந்த சம்பவத்தில், 68 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 130 பேர், காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பொதுவாக, இதுபோன்ற பேரிடர்களில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்கள், ஏழு ஆண்டுகள் வரை திரும்பவில்லை என்றால், அவர்கள் இறந்ததாக அறிவிக்க சட்டம் உள்ளது. சமோலி பேரிடர் விவகாரத்தில், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள, 130 பேர் இறந்தவர்களாக கருதப்படுவதாக அறிவிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கையில், மாநில அரசு இறங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X