புதுடில்லி:மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் மரபணு உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதற்கான பரிசோதனையை அதிகரிக்க, நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மரபணு
மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களில் திடீரென அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா வைரஸ் மரபணு உருமாற்றம் அடைந்தது. அந்த புதிய வைரஸ் பாதிப்பு, நம் நாட்டில், 187 பேரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவிலும், கொரோனா வைரஸ் மரபணு உருமாற்றம் அடைந்து உள்ளது.பகுப்பாய்வுஅந்த வகை வைரஸ் பாதிப்பு, ஐந்து பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நம் நாட்டிலும், இதுவரை, 6,000 மாதிரிகள், மரபணு உருமாற்றம் அடைந்துள்ளதா என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, 900 மாதிரிகள், மரபணு உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது.தற்போதைய நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்டோரில், 5 சதவீத மாதிரிகள், மரபணு உருமாற்றம் ஏற்பட்டு உள்ளதா என, பரிசோதிக்க வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்படுத்தி, பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE