விசாரணை கைதியின் சிறை நாட்களை திரும்ப தர இயலாது: உயர் நீதிமன்றம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
மும்பை:'விசாரணை கைதி மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், சிறையில் செலவழித்த நாட்களை, அவருக்கு திரும்ப தர இயலாது' என, வழக்கு ஒன்றில், மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யானைச் சேர்ந்தவர் அரேப் மஜீத், 27. பயங்கரவாத நடவடிக்கைபுனித பயணம் என, சிரியா சென்ற அவர், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், பயங்கரவாத நடவடிக்கைகளை

மும்பை:'விசாரணை கைதி மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், சிறையில் செலவழித்த நாட்களை, அவருக்கு திரும்ப தர இயலாது' என, வழக்கு ஒன்றில், மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யானைச் சேர்ந்தவர் அரேப் மஜீத், 27. பயங்கரவாத நடவடிக்கைபுனித பயணம் என, சிரியா சென்ற அவர், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, இந்தியா வந்ததாக கூறி, 2014ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, மும்பையில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. கைது செய்யப்பட்டது முதல், ஜாமின் இல்லாமல், மஜீத் சிறையில் இருந்து வருகிறார். இந் நிலையில் அவருக்கு, கடந்த ஆண்டு மார்ச்சில், என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இதை எதிர்த்து, என்.ஐ.ஏ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மஜீத்தின் ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்தது.இந்நிலையில் உயர் நீதி மன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிடேல் ஆகியோர் முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. முடிவில், மஜீத்துக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை, நீதிபதிகள் உறுதி செய்தனர்.

அவர்களின் உத்தரவில், கூறப்பட்டு உள்ளதாவது:இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அரேப் மஜீத் மீதான வழக்கின் விசாரணை, ஆறு ஆண்டுகளாக தொடர்கிறது. இதுவரை, 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும், அவர் மீதான குற்றச்சாட்டு கள் உறுதி செய்யப்பட வில்லை. வழக்கு விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தை கருத்தில் வைத்தே, விசாரணை நீதிமன்றம், மஜீத்துக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இந்தியா திரும்பியதாக, அவர் மீது குற்றம் சாட்டப் பட்டு உள்ளது.சட்டத்திற்கு எதிரானதுஆனால், அதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடு பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.ஒருவர் மீது, சந்தேகத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து, நீண்ட காலம் சிறை காவலில் வைத்திருப்பது, அரசியல்அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

விசாரணையின் முடிவில், அந்த நபர் குற்றவாளி அல்ல என, முடிவுக்கு வரும் நிலையில், சிறையில் அவர் செலவழித்த ஆண்டுகளை திரும்ப தர இயலாது. எனவே, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமின், நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X