சின்னசேலம் : சின்னசேலம் அருகே சாராயம் விற்ற இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று காலை தகரை, கல்லாநத்தம், பாண்டியன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது தகரை சுடுகாடு அருகே அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்,38; செந்தாமரை மனைவி லட்சுமி,57; மொட்டையன் மனைவி பெருமாயி,62; பெருமாள்,46; மற்றும் பாண்டியன்குப்பம் கோவிந்தராஜ்,42; ஆகியோர் சாராயம் விற்றுக்கொண்டிருந்ததுதெரிந்தது. உடன் அவர்களிடமிருந்த 550 லிட்., சாராயத்தை பறிமுதல் செய்து, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE