பொது செய்தி

இந்தியா

சீன அதிபர் இந்தியா வருகிறாரா? வெளியுறவு துறை ஆச்சரியம்!

Added : பிப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:இந்தாண்டு இறுதியில் நடக்கும், 'பிரிக்ஸ்' மாநாட்டுக்கான தேதியே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்குள், இதில் பங்கேற்க, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் வர உள்ளதாக தகவல் பரவியது, நம் வெளியுறவுத் துறைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒத்துழைப்பு இந்தியா - சீனா இடையே, எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. எல்லையில், இரு நாட்டுப் படைகளும், 10 மாதங்களாக
 சீன அதிபர் இந்தியா வருகிறாரா? வெளியுறவு துறை ஆச்சரியம்!

புதுடில்லி:இந்தாண்டு இறுதியில் நடக்கும், 'பிரிக்ஸ்' மாநாட்டுக்கான தேதியே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்குள், இதில் பங்கேற்க, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் வர உள்ளதாக தகவல் பரவியது, நம் வெளியுறவுத் துறைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒத்துழைப்பு



இந்தியா - சீனா இடையே, எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. எல்லையில், இரு நாட்டுப் படைகளும், 10 மாதங்களாக குவிக்கப்பட்டுள்ளன. பாங்காங் சோ பகுதியில் இருந்து மட்டுமே, படைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருந்தும் விலக்கி கொள்வது குறித்து பேச்சு நடக்கிறது. இந்தப் பிரச்னையால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்ஆப்ரிக்கா அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் இந்தாண்டுக்கான தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 'இந்த ஆண்டு இந்தியா நடத்த உள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பைத் தருவோம்' என, சீனா வெளியுறவுத் துறை திடீரென கூறியுள்ளது. அதனால், இந்தாண்டு மாநாட்டில் பங்கேற்க, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இந்தியாவுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாயின.

இது குறித்து, நம் வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:எல்லையில் ஒரு பகுதியில் இருந்து மட்டுமே படைகளை சீனா விலக்கியுள்ளது. எல்லைப் பிரச்னை வேறு, மற்ற பிரச்னை வேறு என, சீனா கூறி வருகிறது. ஆனால், எல்லைப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணப்படாதவரை, மற்ற விவகாரங்களை எடுத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை. இந்தாண்டு பிரிக்ஸ் மாநாட்டுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


'வீடியோ கான்பரன்ஸ்'

மேலும், நேரடியாக நடத்துவதா அல்லது வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்துவதா என்பதும் முடிவு செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், பல நாடுகளின் தலைவர்கள் இதுவரை வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை.பிரிக்ஸ் மாநாட்டுக்கு தேதியே முடிவு செய்யாத நிலையில், சீன அதிபர் இந்தியா வரவுள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
25-பிப்-202113:54:15 IST Report Abuse
S.P. Barucha நல்ல இந்தியனாக இருந்தால் அவனை இந்தியாவில் நுழைய விட கூடாது.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
24-பிப்-202108:48:38 IST Report Abuse
R.RAMACHANDRAN அவர் வருவார் இவர் வரவேற்று விருந்து வைப்பார். எல்லை பிரச்சனையில் யார் செத்தாலும் இவர்களுக்கு பாதிப்பேதும் இல்லை.
Rate this:
Cancel
23-பிப்-202122:39:35 IST Report Abuse
ஆப்பு வெளியுறவுத்துறைக்கு சொல்லிட்டுதான் வரணுமா என்ன? எல்லாம் மாமூலாய் நாம போய் டீ குடிக்கலாம். அவருக்கு இங்கே வவ்வால் வறுவல் செஞ்சு போட்டு அசத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X