உளுந்தூர்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து கோவில் பூசாரி இறந்தார்.
உளுந்துார்பேட்டை தாலுகா பு.கிள்ளனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை 65. அதே பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் பூசாரி. இவர், நேற்று காலை 7.30 மணியளவில் சாலையோரம் நடந்து சென்றபோது, குளத்திற்குசெல்லும் நீர்வழி வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார்.தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூமாலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE