சென்னை வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியால் அர்ப்பணிக்கப்பட்ட, அதிநவீன, 'அர்ஜுன் மார்க் - 1ஏ' வகை போர் பீரங்கிகளை, முறையாக வாங்குவதற்கு, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில், புதிதாக தயாரிக்கப் பட்ட, 'அர்ஜுன் மார்க் - 1ஏ' வகை போர் பீரங்கி வாகனத்தை, சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில், பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையிடமிருந்து, இதே வகையில் அமைந்த, 118 பீரங்கிகளை வாங்குவதற்கு, 'ஆர்டர்' செய்யப்பட்டிருந்தது.
இதற்காக, 8,500 கோடி ரூபாய் வரையில், நிதி ஒதுக்கீடு தேவை என்றும் கூறப்பட்டது. இந் நிலையில், இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அர்ஜுன் ரக பீரங்கிகளை வாங்குவதற்கான, மத்திய அரசின் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி, இந்திய ராணுவத்துக்கு, 6,000 கோடி ரூபாயில், 118 'அர்ஜுன் மார்க் - 1ஏ' வகை போர் பீரங்கிகளை வாங்குவதற்கு, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதுதவிர, 'நாக் டாங்க்' எதிர்ப்பு ஏவுகணை, அருத்ரா ரேடார் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கும், ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE