சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி லாரியில் சாராயம் கடத்தல் 2 பேர் கைது : 50 லிட்டர் பறிமுதல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மினி லாரியில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாஉல் ஹக் உத்திரவின் பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் கல்வராயன்மலை தெத்துக்காடு சோதனை சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரி டியூப்பில் சாராயம் கடத்தி வந்தது தெரிய

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மினி லாரியில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாஉல் ஹக் உத்திரவின் பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் கல்வராயன்மலை தெத்துக்காடு சோதனை சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரி டியூப்பில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து சாராயம் கடத்திய புது பாலபட்டு காலனியை சேர்ந்த முனியன் மகன் பூபதி 50, பூபதி மகன் சுமன்,19. ஆகியோரை கைது செய்து, 5 லாரி டியூப்களில் இருந்த 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைபற்றி, கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.இதில் போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற கல்வராயன்மலை சிறுகளுரை சேர்ந்த முத்து மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X