பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோருக்கான விருதுகள் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வழங்கல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கடலுார் : முதல்வரின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மாவட்ட அளவில் விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழினை, கலெக்டர் சந்திரசேகர சாகமுரி வழங்கினார். மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் தமிழ்நாடு முதல்வர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மாவட்ட

கடலுார் : முதல்வரின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மாவட்ட அளவில் விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழினை, கலெக்டர் சந்திரசேகர சாகமுரி வழங்கினார்.

மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் தமிழ்நாடு முதல்வர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.கடலுார் மாவட்டத்தில் 2016--17ம் ஆண்டிற்கான விருதினை இயந்திர தளவாடங்கள் நிர்மாணித்தல் பாபு ரோபோடெக் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ்பிள்ளைக்கும், 2017--18ம் ஆண்டிற்கான விருது, முந்திரி பதப்படுத்துதல் பிரதீபா கேஷிவ்ஸ் நிறுவனத்தின் மேலாண் பங்குதாரர் ராமகிருஷ்ணனுக்கும் 2018-19ம் ஆண்டிற்கான விருது, முந்திரி பதப்படுத்துதல் சவுந்திரராஜன் கேஷிவ்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கவிதாவுக்கும் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வழங்கினார்.நிகழ்வில் மாவட்ட தொழில் மைய அலுவலர் இளங்கோவன், முன்னோடி வங்கி மேலாளர் அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X