சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடப்பிரச்னை தகராறு: 7 பேர் மீது வழக்கு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னை தகராறில் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி காலனியை சேர்ந்த அய்யாசாமி மகன் மணிவேல்,29; என்பவருக்கும், புக்கிரவாரியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராஜகோபால். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.கடந்த இரு

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னை தகராறில் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி காலனியை சேர்ந்த அய்யாசாமி மகன் மணிவேல்,29; என்பவருக்கும், புக்கிரவாரியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராஜகோபால். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.கடந்த இரு தினங்களுக்கு முன் புக்கிரவாரியில் கடையின் முன் நின்றிருந்த மணிவேலு, அவரது மனைவி லட்சுமி,25; தாடிகாரன் மனைவி சித்ரா,22 ஆகியோரை ராஜகோபால் தாக்கினார். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.

அதேபோல் ராஜகோபால் தரப்பை சேர்ந்த மலர்கொடி, பிரியலட்சுமி, சிவா ஆகியோரை மணிவேலு தரப்பினர் தாக்கினர்.இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X