கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னை தகராறில் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி காலனியை சேர்ந்த அய்யாசாமி மகன் மணிவேல்,29; என்பவருக்கும், புக்கிரவாரியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராஜகோபால். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.கடந்த இரு தினங்களுக்கு முன் புக்கிரவாரியில் கடையின் முன் நின்றிருந்த மணிவேலு, அவரது மனைவி லட்சுமி,25; தாடிகாரன் மனைவி சித்ரா,22 ஆகியோரை ராஜகோபால் தாக்கினார். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
அதேபோல் ராஜகோபால் தரப்பை சேர்ந்த மலர்கொடி, பிரியலட்சுமி, சிவா ஆகியோரை மணிவேலு தரப்பினர் தாக்கினர்.இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE