காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் ; 3 பேர் மீது வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் ; 3 பேர் மீது வழக்கு

Added : பிப் 23, 2021
Share
கள்ளக்குறிச்சி : காதலித்து திருமணம் செய்தவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் புதுக்காலனியை சேர்ந்த நேரு மகள் அனு,20; இவர் அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் பிரவீன்குமார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பிரவீன்குமார் வீட்டில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், எதிர்ப்பையும்

கள்ளக்குறிச்சி : காதலித்து திருமணம் செய்தவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் புதுக்காலனியை சேர்ந்த நேரு மகள் அனு,20; இவர் அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் பிரவீன்குமார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

பிரவீன்குமார் வீட்டில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், எதிர்ப்பையும் மீறி இருவரும், கடந்த 16ம் தேதி கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.இதனால் ஆத்திரமடைந்த அனுவின் உறவினர்கள் அய்யப்பன், ராமலிங்கம், அனிதா ஆகியோர் சேர்ந்து, நேற்று முன்தினம் அனுவின் வீட்டில் இருந்த பிரவீன்குமாரை உருட்டு கட்டையால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.அனு கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் அய்யப்பன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X