சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சப் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் திடீர் முற்றுகை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தை ஊராட்சி தலைவர் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம்

விருத்தாசலம் : விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தை ஊராட்சி தலைவர் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே, ஒன்றிய பொது நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி துவங்கியது.இதனை, அதேபகுதியைச் சேர்ந்த அறிவரசன் என்ற தனிநபர், தனது வயலுக்கு செல்லும் பாதையில் கட்டுமான பணி நடைபெறுவதாக கூறி, தடுத்து நிறுத்தினார்.

அதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான கிராம மக்கள் நேற்று சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இது சம்பந்தமான கோரிக்கை மனுவை சப் கலெக்டர் பிரவீன்குமாரிடம் வழங்கினர். மனுவை பெற்ற சப் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X