திண்டிவனம் : சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், திண்டிவனத்திற்கு வராமல், புறவழிச்சாலை வழியாக செல்வதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து மார்க்கங்களிலிருந்து வரும் பஸ்கள், நின்று செல்வதற்கு போதுமான வசதிகளுடன் நிரந்தர பஸ் நிலையம் இல்லை.இதனால், தொலைதுாரத்தில் இருந்த வரும் அரசு பஸ்கள், நகரை ஒட்டியுள்ள புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால், திண்டிவனத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்கள், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றது.ஆனால், அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும், சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ்கள் திண்டிவனம் நகருக்கு வருவதில்லை. சென்னையில் இருந்து வரும் அரசு பஸ்கள் திண்டிவனம் அடுத்த சலவாதி புறவழிச்சாலை, சந்தைமேடு வழியாக திருவண்ணாமலைக்கு செல்கின்றது. இதனால், திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பஸ்கள், திண்டிவனம் அருகே நகராட்சி சுடுகாடு அமைந்துள்ள சாலையில் புதியதாக போடப்பட்டுள்ள மேம்பாலம் வழியாக தீர்த்தக்குளம், செஞ்சி பஸ் நிறுத்தம் வழியாக திருவண்ணாமலைக்கு செல்வதற்கு, போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் துரித நடவடக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE