திட்டக்குடி : கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் அறிக்கை;முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளன்று ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கிளை, வார்டுகள் தோறும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.மாலை 6 மணிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரும், "என் இல்லம், அம்மாவின் இல்லம்" என நினைத்து வீடுகளில் தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்து, 'உயிர்மூச்சுள்ள வரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அ.தி.மு.க., இயக்கத்தையும் காப்பேன்.இது அம்மா மீது ஆணை' என உறுதி ஏற்க வேண்டும்.
ஜெ.,பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் சேத்தியாதோப்பில் பிப்.28ம் தேதியும், மங்கலம் பேட்டையில் மார்ச் 1ம் தேதியும், ராமநத்தத்தில் மார்ச் 2ம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் கட்சி முன்னோடிகள், முன்னாள், இந்நாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் மன்றம், இளைஞரணி, இளைஞர் பாசறை, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE