சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து கடலுாரில் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கடலுார் : சென்னையில் அரசு ஊழியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்து, கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும். நிலுவை பணப்பலன்களை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி,

கடலுார் : சென்னையில் அரசு ஊழியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்து, கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும். நிலுவை பணப்பலன்களை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் கடந்த 19ம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் மாநில செயலாளர் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்தும், சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கடலுார் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கடலுார் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் செல்வம் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X