விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றாலும், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசினார்.
பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசியதாவது,தே.மு.தி.க., கடந்த 2005ம் ஆண்டு துவங்கியதில் இருந்தே மக்களின் பிரச்னைகளுக்காக மட்டுமே போராடி வருகிறது. கூட்டணியில் உள்ள நாங்கள் தற்போது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது சம்பந்தமாக பலரும் எங்களிடம் கேள்வி எழுப்பினர். கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. நாங்கள் கூட்டணியில் இருக்கும் போதே பல துரோகிகளை சந்தித்துள்ளோம்.
விஜயகாந்த் கூட்டணி விஷயத்தில் எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.தே.மு.தி.க., தனது பலத்தை இழந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எங்கள் பலத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என கூறுபவர்கள் நினைத்தால் நாங்கள் அதை காட்ட தயாராக உள்ளோம்.தே.மு.தி.க., வேண்டுமா? வேணாமா? என ஆளுங்கட்சி விரைவாக முடிவு செய்ய வேண்டும். கூட்டணி இல்லை என்றாலும் எங்களால் தேர்தலை சந்திக்க முடியும் என பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE