திட்டக்குடி : ராமநத்தம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
விருத்தாசலம் - தொழுதூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆக்கிரமிப்பாளர்களே முன்வந்து அகற்றிக் கொள்ள பிப்., 22ம் தேதி வரை அவகாசம் வழங்கி, இரண்டு வாரங்களுக்கு முன், நோட்டீஸ் வழங்கப்பட்டது.கெடு முடிந்ததையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் அருண் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, பொக்லைன் மூலம் அகற்றும் பணி துவங்கியது. ராமநத்தம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சாலையின் வடபுறத்தில் ஆட்சேபகரமான இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.ஆனால், சாலையின் தென்புறத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அளவீடு செய்யாததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE