விழுப்புரம் : செஞ்சி மற்றும் மேல்மலையனுார் ஒன்றியங்களில் துணை ஓட்டுச் சாவடிகள் அமைப்பது குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
கொரோனா பரவல் காரணமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 1,050க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச் சாவடிகளை பிரித்து துணை ஓட்டுச் சாவடி அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் துணை ஓட்டுச்சாவடி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று முகையூர் ஒன்றியம், ஒதியத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, கண்டாச்சிபுரம், அடுக்கம் தொடக்க பள்ளி, செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல், துத்திப்பட்டு தொடக்க பள்ளிகள், அனந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளி, மேல்மலையனுார் ஒன்றியம் அன்னமங்கலம் தொடக்க பள்ளிகளில் துணை ஓட்டுச் சாவடி அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, துணை ஓட்டுச் சாவடி மையங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்கும் அறைகள், குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளி, முதியோர் ஓட்டுப்போட எளிதாக வந்து செல்ல சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., சாய்வர்தினி, தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE