சிதம்பரம் : தமிழ்நாடு வூசூ சங்கம் சார்பில், துாத்துக்குடியில் நடந்த மாநில அளவிலான குங்பூ போட்டியில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில் 17வது மாநில அளவிலான குங்பூ போட்டி, கடந்த 19 முதல் 21ம் தேதி வரை நடந்தது. இதில் கடலுார் மாவட்டத்தின் தாய்ஷூ குங்பூ பயிற்சி பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகள் 20 பேர் பங்கேற்றனர். 42 கிலோ எடைப் பிரிவில் சோமேஸ்வர், 38 கிலோ எடை பிரிவில் பாலவிக்னேஷ் வெண்கலம், வாள் வீச்சில் நிலேஷ், ஸ்ரீ சக்திபாலன் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.மேலும் தரணி, சத்யநாராயணன், சஞ்சய், சூர்யா, தனுஷ், யுகேஷ் 50 எடை பிரிவில் நடந்த சண்டை பயிற்சியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கடலூர் மாவட்ட வூசூ சங்கத் தலைவர் சிவராஜ் பாராட்டி, பரிசு வழங்கினார். சங்க செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE