பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லுாரியில் ஆட்சிமன்றக் குழு கூட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பிருந்தா தலைமை தாங்கினார். ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், பல்கலைக்கழக பிரதிநிதியாக, சென்னை பல்கலைக் கழக உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் நிரஞ்சலி தேவி, அரசு பிரதிநிதியாக வேலுார் மாவட்ட கல்லுாரி கல்வியின் இணை இயக்குநர் எழிலன், கல்லுாரியின் பிரதிநிதிகளாக

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் பிருந்தா தலைமை தாங்கினார். ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், பல்கலைக்கழக பிரதிநிதியாக, சென்னை பல்கலைக் கழக உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் நிரஞ்சலி தேவி, அரசு பிரதிநிதியாக வேலுார் மாவட்ட கல்லுாரி கல்வியின் இணை இயக்குநர் எழிலன், கல்லுாரியின் பிரதிநிதிகளாக திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளர் சையத் ஷாபி, பாரதிதாசன் மேலாண்மை நிறுவன பேராசிரியர் ஜெயாகிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

கல்லுாரி தாளாளர் சாமிகண்ணு, செயலாளர் செந்தில்குமார், இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் பதிவாளர் சவுந்தரராஜன், பேராசிரிய பிரதிநிதிகள் செல்வி, ஸ்ரீதேவி ஆகியோரும், முன்னாள் அலுவல் சார்ந்த உறுப்பினராக ஆராய்ச்சிபுல முதன்மையர் உத்ரா கலந்து கொண்டனர். கல்லுாரியின் செயல்திறன் குறித்த அறிக்கையை முதல்வர் பிருந்தா வழங்கினார். நிர்வாக செயல்திறன் குறித்து, இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் பதிவாளர் சவுந்தரராஜன், தன்னாட்சி கல்லுாரிகளுக்கான தரவரிசையில் இந்திய அளவில் 84வது இடத்தை பெற்றுள்ள திறம், பேராசிரியர்கள் பெற்ற விருதுகள், இணையவழி கற்பித்தல் குறித்து கூறினார்.

செயலாளர் செந்தில்குமார், கல்லுாரிக்கு ஆட்சிமன்ற குழுவின் பங்களிப்பு, கொரோனா காலத்தில் கல்லுாரியில் புதுமையான நடைமுறையாக புகுத்திய இணையவழி வகுப்புகள், தேர்வு முறை சிறப்புகள் பற்றி விவரித்தார்.இந்த கூட்டத்தில், புதிய பாடநெறி முறைகள் அறிமுகம், வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை தரும் பாடத்திட்ட கட்டமைப்பு, தொழில்நுட்ப திட்டம், ஆராய்ச்சி முயற்சி, மாணவர் முன்னேற்றம், கல்லுாரி தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வு, கேள்விதாள் அமைப்பு முறைகள் குறித்து விவாதிக்கபட்டது. ஆட்சி மன்ற குழுவினர் தங்களின் ஆலோசனைகளை வழங்கி, முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளுக்கு ஒப்புதல் அளித்தனர். ஆராய்ச்சிபுல முதன்மையர் உத்ரா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X