கடலுார் : கேரளாவில் நடக்கும் தென்னிந்திய தடகளப் போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட அணி வீரர்களுக்கு பயணப்படி வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டி நடக்கிறது. இதில், கடலுார் மாவட்ட அணி சார்பில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பயணப்படியாக 3,000 ரூபாயை கிரிடா பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவர் ரோகபரணி, சி.சி.சி., கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி நிறுவனர் பத்மகுமார் ஆகியோர் சொந்த செலவில் வழங்கினர்.கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கிரிடா பாரதி அமைப்பின் மாவட்ட செயலர் அசோகன், பொருளாளர் அருட்செல்வம் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், பாபு, தினகரன், ராஜேஷ் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE