பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை நார் தொழில் மேம்படும்!: பொள்ளாச்சி தொழில் துறை வரவேற்பு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ஊரக ரோடுகள் மேம்படுத்தும் திட்டத்தால், தென்னை நார் தொழில் வளர்ச்சி பெறும் என, பொள்ளாச்சி தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு, நிதி ஒதுக்கீடுகளுக்கு, பொள்ளாச்சி தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாராட்டலாம்கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர்:
 தென்னை நார் தொழில் மேம்படும்!: பொள்ளாச்சி தொழில் துறை வரவேற்பு

பொள்ளாச்சி:தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ஊரக ரோடுகள் மேம்படுத்தும் திட்டத்தால், தென்னை நார் தொழில் வளர்ச்சி பெறும் என, பொள்ளாச்சி தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு, நிதி ஒதுக்கீடுகளுக்கு, பொள்ளாச்சி தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


பாராட்டலாம்



கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர்: தமிழக பட்ஜெட்டில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கணிப்பொறிஅறிவியல் பாடம் அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 6,683 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் டிச., மாதத்துக்குள் நிறைவு செய்யும் அறிவிப்பு வரவேற்கதக்கது.சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு, விவசாயத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பயிர் கடன் தள்ளுபடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளும்; கொரோனா கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்கான செலவுகள் செய்து, கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நடவடிக்கையை பாராட்டலாம்.


வரவேற்கத்தக்கது



கவுதமன், கயிறு வாரிய உறுப்பினர்: தமிழக பட்ஜெட்டில், கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊரக ரோடுகள் மேம்படுத்தும்போது, மத்திய அரசின், 'காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' பயன்படுத்த வேண்டும் என, அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், தென்னை நார் தொழில் வளர்ச்சி பெறும்.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு புதிய தொழில் துவங்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு, இடைக்கால பட்ஜெட்டில், 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு ஏற்படும்.

தமிழகம் முழுவதும் சந்தைப்படுத்துதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதுபோன்று திட்டங்கள் வரவேற்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்படும், இடைக்கால பட்ஜெட்டில், கவர்ச்சி அறிவிப்பு எதுவும் இல்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X