விருத்தாசலம் : காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இவரது மனைவி சரண்யா 19. சரண்யா உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சரண்யாவை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE