சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கண்டாச்சிபுரம் : விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகியபோது தவறி விழுந்த சிறுவன் இறந்தார். கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் ஷியாம் (எ) செந்தமிழ்,8; இவர் நேற்று மாலை அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் ஞானப்பிரகாசம் என்பவரது விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்தார்.அப்போது, சிறுவன் ஷியாம் தவறி கிணற்றில் விழுந்தார்.

கண்டாச்சிபுரம் : விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகியபோது தவறி விழுந்த சிறுவன் இறந்தார்.

கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் ஷியாம் (எ) செந்தமிழ்,8; இவர் நேற்று மாலை அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் ஞானப்பிரகாசம் என்பவரது விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்தார்.அப்போது, சிறுவன் ஷியாம் தவறி கிணற்றில் விழுந்தார். திடுக்கிட்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள், சிறுவன் ஷியாமை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதுபற்றி தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் வேட்டவலம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சிறுவன் ஷியாமின் உடலை இரவு 8:00 மணி அளவில் மீட்டனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X