அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாங்க மோடி... வணக்கங்க மோடி! கொங்கு பாஷையில் பா.ஜ., பாடல் 'ரெடி'

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று, பா.ஜ., கட்சியினர், கொங்கு பாஷையில், 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடல் தயாரித்துள்ளனர்; அக்கட்சி தேசிய மகளிரணி தலைவி வானதி, இணைந்து பாடியுள்ளார்.பா.ஜ., சார்பில், கோவை 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில், நாளை (25ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கொங்கு மண்டலத்தை திரும்பி

கோவை:கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று, பா.ஜ., கட்சியினர், கொங்கு பாஷையில், 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடல் தயாரித்துள்ளனர்; அக்கட்சி தேசிய மகளிரணி தலைவி வானதி, இணைந்து பாடியுள்ளார்.

பா.ஜ., சார்பில், கோவை 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில், நாளை (25ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கொங்கு மண்டலத்தை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு கூட்டம் அமைய வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வினர் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை, கொங்கு பாஷையில் வரவேற்கும் விதமாக, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில், கலை இலக்கிய பிரிவின் உமேஷ்பாபு, 'ஆர்கெஸ்ட்ரா' சண்முகம் இணைந்து, பாடல் வரிகளை தயாரித்துள்ளனர்.

''வாங்க மோடி வணக்கங்க மோடிகொங்கு மக்கள் வரவேற்போம் கோடிநீங்க தந்த திட்டங்கள் கோடி மக்கள் என்றும் உங்க பின்னாடி அனைவருக்கும் வீடு, மருத்துவ காப்பீடுவாங்க மோடி வணக்கங்க மோடிகொங்கு மக்கள் வரவேற்போம் கோடி...'' என்றவாறு, மூன்று நிமிஷத்துக்கு பாடல் ஒளிபரப்பு செய்துள்ளனர்.

அதில், 'வாங்க மோடி வணக்கங்க மோடி' என்கிற முதல் வரியை, அகில இந்திய பொது செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் அண்ணாமலை, இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர், பாடியுள்ளனர். சில வரிகளை, பாடகர்களுடன் இணைந்து வானதியும் பாடியுள்ளார்.

வார்த்தைகளை எளிமைப்படுத்தி, சில திருத்தங்கள் செய்து, முழுமை செய்யப்பட்டுள்ள பாடல், இன்று வெளியிடப்படுகிறது.'வெற்றி நடை போடும் தமிழகமே' என, அ.தி.மு.க., வினரும், 'ஸ்டாலின் வர்றாரு... விடியல் தரப்போறாரு' என, தி.மு.க.,வினரும் வீதிக்கு வீதி பாடல் ஒளிபரப்பி வரும் நிலையில், பிரதமர் மோடியை வரவேற்று, பா.ஜ.,வினர் தயாரித்துள்ள பாடலின் சில வரிகளை மட்டும் முன்னோட்டமாக, 'வாட்ஸ்ஆப்' குழுக்களில் அக்கட்சியினர் பரப்பினர். இது, வைரலாக பல்வேறு குழுக்களுக்கு பரவி வருவதால், முழு பாடலை கேட்க, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X