விழுப்புரம் : விழுப்புரம் சபா அகடாமியில் 23 மற்றும் 24வது பட்டமளிப்பு மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம், சபா அகாடமியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாளாளர் ப்ரீத்தா கனகசபாபதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி வரவேற்றார்.கடந்தாண்டு பிப்., மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்த பரிட்சயா மற்றும் பிரவின் வரையிலான இந்தி தேர்வில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேலாளர் நெல்லையப்ப பிரபு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும், கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் விஷாரத் பட்டத்தை 30 பேரும், பிரவின் பட்டத்தை 40 பேரும் பெற்றனர்.
இவர்களுக்கு துணை மேலாளர் பொன் மாரியப்பன் சான்றிதழ் மற்றும் பரிசளித்தார்.நிர்வாகிகள் ரமேஷ், கந்தசாமி, விஜயலட்சுமி, புவனேஷ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை சிவரஞ்சனி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE