அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விழுப்புரத்தில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
விழுப்புரம் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, விழுப்புரத்தில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம், பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ், மாவட்ட செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.அவை தலைவர்கள் கணபதி (விழுப்புரம்), முருகன் (கள்ளக்குறிச்சி),

விழுப்புரம் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, விழுப்புரத்தில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம், பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ், மாவட்ட செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.அவை தலைவர்கள் கணபதி (விழுப்புரம்), முருகன் (கள்ளக்குறிச்சி), பொருளாளர் தயாநிதி, துணை செயலாளர்கள் புருஷோத்தமன், சுந்தரேசன், வெங்கடேசன், சூடாமணி, தொகுதி பொறுப்பாளர் தேசம் செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பெட்ரோல், டீசல் , காஸ் விலை உயர்வை கண்டித்தும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைமை செயற்குழு கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் குமார், முருகன், சுப்ரமணி, ஜெயமூர்த்தி, ஞானசேகர், பாபு, மதியழகன், நகர செயலாளர் மணிகண்டன், இளைஞரணி துணை செயலாளர் சீனு, கேப்டன் மன்ற துணை செயலாளர் ஆதவன் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் 100 பேர், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரில் இருந்து கலெக்டர் பெருந்திட்ட வளாகம் வரை, சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X