சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலமுறை ஊதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
விழுப்புரம் : காலமுறை ஊதியம் வழங்க கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகேவுள்ள நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் பிரேமா தலைமை தாங்கினார்.பொருளாளர் ராமதிலகம், செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர்

விழுப்புரம் : காலமுறை ஊதியம் வழங்க கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகேவுள்ள நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் பிரேமா தலைமை தாங்கினார்.பொருளாளர் ராமதிலகம், செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை தலைவர் குமார் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.இதில், நிர்வாகிகள் சரோஜா, பழனியம்மாள், கொளஞ்சியம்மாள், கோவிந்தம்மாள், சரளா உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிஓய்வு பெறும் போது, பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அகவிலைப்படியோடு கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X