பொது செய்தி

தமிழ்நாடு

மழையில் நனைந்த நெல்கள் உலர வைக்கும் பணி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ஏரியில் இயங்கிய அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்லை உலர வைக்கம் பணி தீவிரமாக நடக்கிறது. நடுவீரப்பட்டு ஏரி பகுதியில் நடுவீரப்பட்டு, குமளங்குளம், விலங்கல்பட்டு, பத்திரக்கோட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய கடந்த 10 நாட்களாக வைத்திருந்தனர். அதிகாரிகள் அலட்சியத்தால் நேற்று

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ஏரியில் இயங்கிய அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்லை உலர வைக்கம் பணி தீவிரமாக நடக்கிறது.

நடுவீரப்பட்டு ஏரி பகுதியில் நடுவீரப்பட்டு, குமளங்குளம், விலங்கல்பட்டு, பத்திரக்கோட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய கடந்த 10 நாட்களாக வைத்திருந்தனர். அதிகாரிகள் அலட்சியத்தால் நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழையில் நனைந்து நெல் சேதமடைந்தது.தகவலறிந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளாளர் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, விவசாயிகளிடம் நனைந்த நெல்லை காயவைத்ததும் கொள்முதல் செய்வதாக உறுதியளித்தனர்.இதையடுத்து விவசாயிகள் நனைந்த நெல்லை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X