பொது செய்தி

தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாராட்டு விழா

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திண்டிவனம் : மாவட்ட அளவில் நடந்த வினாடி வினா மற்றும் நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டினார். பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த வினாடி வினா போட்டியில், வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுபஸ்ரீ மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவரை சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா பாராட்டினார்.அதன் தொடர்ச்சியாக வேப்பேரி பள்ளியில் நடந்த நாடகப்

திண்டிவனம் : மாவட்ட அளவில் நடந்த வினாடி வினா மற்றும் நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டினார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த வினாடி வினா போட்டியில், வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுபஸ்ரீ மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவரை சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா பாராட்டினார்.அதன் தொடர்ச்சியாக வேப்பேரி பள்ளியில் நடந்த நாடகப் போட்டியில் மாணவி யோகலட்சுமி குழுவினர் வெற்றி பெற்றனர்.மாவட்ட அளவில் பரிசு பெற்ற மாணவி சுபஸ்ரீ மற்றும் குழு நாடகத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நடந்த விழாவில் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, மாணவிகளுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த தமிழாசிரியர் ஆறுமுகம் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X