குறிஞ்சிப்பாடி : அயன் குறிஞ்சிப்பாடியில் வயல் மற்றும் விதை விழாவுடன், விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில், வயல் மற்றும் விதை விழாவில் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. அயன் குறிஞ்சிப்பாடி உழவர்மன்றத் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார்.இதில், மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர், பேராசிரியர் சுப்பிரமணியன் ஆலோசனைப்படி, அறிவியல் நிலைய பேராசிரியர் நடராஜன் மணிலாவில் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.
பூச்சி நிர்வாகம் பற்றி பேராசிரியர் விஜயராகவன் பேசினார். அயன் குறிஞ்சிப்பாடி பகுதி, இருபாலர் விவசாயிகளுடன் வயல் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில், 50 விவசாயிகள் கலந்து கொண்டு மணிலா தேர்வு குறித்த பயிற்சி பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE