திருவெண்ணெய்நல்லுார், : விழுப்புரம் சென்ற தமிழக முதல்வருக்கு திருவெண்ணெய் நல்லுாரில் அ.தி.மு.க.,வினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்துனா விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவிற்கு சென்றார்.அப்போது, அவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, திருவெண்ணெய்நல்லுார் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் தலைமையில் பேரங்கியூர் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி ஏகாம்பரம், மாவட்ட ஆவின் துணை தலைவர் சேகர், ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் மோகன், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் முருகன், ஒன்றிய அவைத் தலைவர் வேலாயுதம், ஒன்றிய இணைச் செயலாளர் சிவகாமி முருகதாஸ், பாவந்துார் கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் அய்யனார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சிவா, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் அரிராமன், மாவட்ட பிரதிநிதி கோமதி, முன்னாள் தலைவர்கள் மேகநாதன், சண்முகம், ஆறுமுகம், கணேசன், கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி செயலாளர் தமிழரசன், செம்மார் கூட்டுறவு வங்கி தலைவர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE