பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயிலுக்கு, 'வெல்கம்' கோவை தொழில் துறையினர் கருத்து

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:மெட்ரோ ரயில், சிறுகுறுதொழில் நிறுவன வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகளை, கோவை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், கோவை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் திட்டம், தொழிற்பேட்டைகளை ஊக்குவிக்க நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகளை கோவை தொழில்
 மெட்ரோ ரயிலுக்கு, 'வெல்கம்' கோவை தொழில் துறையினர் கருத்து

கோவை:மெட்ரோ ரயில், சிறுகுறுதொழில் நிறுவன வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகளை, கோவை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், கோவை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் திட்டம், தொழிற்பேட்டைகளை ஊக்குவிக்க நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகளை கோவை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.


பயனுள்ள திட்டம்

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன்: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வரவேற்கத்தக்கது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 6,683 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பாராட்டுக்கு உரியது. விவசாய கடன் தள்ளுபடிக்கு, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்பது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் இருக்கும். அதேசமயம், கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து மீண்டுவரும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிதி ஒதுக்கியிருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்.


எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சிக்கு உதவும்

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க(கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு: அதாவது, 2020-21ம் ஆண்டில் பொருளாதார மந்த நிலை, கொரோனா தொற்று காலகட்டம் என்ற நிலையிலும், 39 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பிலான, 62 திட்ட முதலீடுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

கோவை மெட்ரோ ரயில் திட்டம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த, 300 கோடி ஒதுக்கீடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, 2,350 கோடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கு, 200 கோடி என பல்வேறு அறிவிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம்.எஸ்.எம்.இ.,களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது.


திறன் மேம்பாட்டுக்கு வலிமை



கோயம்புத்துார், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க(காட்மா) தலைவர் சிவக்குமார்: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 6,683 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலிமைப்படுத்த, தமிழ்நாடு தொழில் கொள்கை அறிக்கையின்போது அறிவிக்கப் பட்ட, 1,000 கோடி ரூபாய் நிதியில் தற்போது, 300 கோடி ஒதுக்கப்படுகிறது.

தமிழக திறன் மேம்பாட்டு கழகத்துக்கு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.


பாராட்டுக்குரியது!

கோவை மாவட்ட கிரில்தயாரிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் ரவி: கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கு, 200 கோடி என வளர்ச்சி திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேசமயம், கிரில், வெல்டிங் குறுந்தொழிலுக்கு, 500 யூனிட் வரை இலவச மின்சாரம், அதற்கு மேல் சலுகை கட்டணம் உள்ளிட்டவை நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

வரும் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் குறுந்தொழில், கிரில் தொழில் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றால் உதவியாக இருக்கும்.


நிதிச்சுமை அதிகரிக்கும்!

ஆடிட்டர் கார்த்திகேயன் கூறியதாவது: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் கடன் சுமை, 4.85 லட்சம் கோடி என்பது தற்போது, 5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த கடனுக்கான வட்டி வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிக்கும்.

நடப்பாண்டு வளர்ச்சி, 2.02 சதவீதமாக இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தாண்டில், 11.5 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான முழு பலன் அளிக்கும் முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டியிருக்கும்.கொரோனா காரணமாக, ஜி.எஸ்.டி,. பங்கு உட்பட மாநிலத்தின் வரி வருமானமானது, 18 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா சமயத்தில் சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும் அரசின் மீதான எதிர்பார்ப்பை பூத்திசெய்கிறது.

நிதி பற்றாக்குறை கடன் மூலம் சமாளிக்கப்படும். கடன் மூலம் சமாளிக்கப்படாத பட்சத்தில் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் நிறைவுபெறுவது சவாலாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X