பனை விதை நடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனை விதை நடல்

Added : பிப் 23, 2021
Share
புவனகிரி : புவனகிரி அருகே கிராமங்களில் இளைஞர்கள் பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கினர். புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகத்துடன் இளைஞர்கள் இணைந்து மண் வளத்தையும், நீர் ஆதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை சேகரித்து நடும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், வடகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சுற்று பகுதி கிராமங்களில்

புவனகிரி : புவனகிரி அருகே கிராமங்களில் இளைஞர்கள் பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கினர்.

புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகத்துடன் இளைஞர்கள் இணைந்து மண் வளத்தையும், நீர் ஆதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை சேகரித்து நடும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், வடகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சுற்று பகுதி கிராமங்களில் இந்நிகழ்ச்சி துவக்கினர். பொதுமக்கள் ஆர்வத்துடன் இளைஞர்களுக்கு உதவியாக பனை விதைகளை சேகரித்து உதவினர். இப்பகுதி இளைஞர்கள் ஏற்கனவே கல்வி நிலைய வளாகம், கோவில்வளாகம், பொது இடங்களில் பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X