சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

திருமணத்திற்கு பிறகும் படித்தேன்!

Added : பிப் 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருமணத்திற்கு பிறகும் படித்தேன்!கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், மனநல ஆலோசகர், 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர், மிகச் சிறந்த பேச்சாளர் என பன்முகம் காட்டுவது பற்றி, ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்: கோவையில் பிறந்தேன். அப்பா பாலசுப்ரமணிய பாரதி ரயில்வேயில் வேலை; அம்மா மகாலட்சுமி.

சொல்கிறார்கள்

திருமணத்திற்கு பிறகும் படித்தேன்!

கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், மனநல ஆலோசகர், 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர், மிகச் சிறந்த பேச்சாளர் என பன்முகம் காட்டுவது பற்றி, ஜெயந்தஸ்ரீ பால
கிருஷ்ணன்: கோவையில் பிறந்தேன். அப்பா பாலசுப்ரமணிய பாரதி ரயில்வேயில் வேலை; அம்மா மகாலட்சுமி. திருமணத்திற்கு முன், ஜெயந்தஸ்ரீ பாரதியாக இருந்த நான், திருமணத்திற்கு பின், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகி விட்டேன்.கணவர் பாலகிருஷ்ணன், கேரளாவில் உள்ள கண்ணுாரை அடுத்த பையனுாரைச் சேர்ந்தவர். பி.எஸ்.ஜி., சர்வஜன மேனிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். பணி ஓய்வு பெற்ற பின், கோவையில் ஒரு பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக இருக்கிறார்.
அவர், பிரபல மலையாள எழுத்தாளர், எம்.டி.வாசுதேவன் நாயரின் படைப்புகளை ஆராய்ந்து, பி.எச்டி., செய்தார். என் மகன், ரஞ்சித் பிஜாய்.
என் கணவர் பெயரில் உள்ள பி; என் பெயரில் உள்ள, ஆங்கில எழுத்தான ஜே; இரண்டையும் சேர்த்து, என் கணவருக்கு மிகவும் பிடித்தமான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் முதல் எழுத்துகளையும் சேர்த்து, 'ரஞ்சித் பிஜாய்' என பெயர் வைத்தோம்.மருமகள் இந்துஜா; பேரன் அபிநவ் ஸ்ரீராம். என் மகன், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தவன். தற்போது மகனும், மருமகளும் சென்னையில் இருக்கின்றனர். கடந்த, 1980ல், எம்.ஏ., முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, என் முதல் கதை பிரசுரம் ஆனது. 'திசைகள்' என்ற பத்திரிகையின் துணை ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், மார்ஷல், நளினி சாஸ்திரி என பலரும் ஒரு குழுவாக இயங்கினோம்.
எம்.ஏ., தமிழ் தேர்வு எழுதும்போது, எனக்கு வயது, 40. முதலில், எம்.ஏ., - பி.எட்., படித்திருந்தேன். திருமணத்திற்கு பின், எம்.ஏ., - எம்.எட்., முடித்தேன்; பேராசிரியை ஆனேன். 'எழுத்தாளர் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் மூலப் படிமன் பாத்திரப் படைப்பும் மொழிபு உத்திகளும்' என்ற ஆய்வுக்காக, தமிழில் முனைவர் பட்டம் பெற்றேன். நான் மேடைகளில் சிறப்பாக பேசுகிறேன் என்கின்றனர். பேசுகிறேன் என்பதை விட, 'கம்யூனிகேட்' செய்கிறேன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
என் பேச்சை தீவிரமாக தலையசைதது கவனிக்கின்றனர் என்பதை, எதிரே இருப்பவர்களின் உடல் மொழி மூலம் அறிந்து கொள்வேன். உங்கள் கண்கள் எங்கிருந்தாலும், காதுகள் என் பக்கம் இருந்தால் போதும். கதவுகள் இல்லாத காதுகள் வழியே உள்ளே புகுந்து விடுவேன்!

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
24-பிப்-202112:13:25 IST Report Abuse
Gopinathan S வாயை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவர்....எத்தனை பேருக்கு இது தெரிந்திருக்கும் என்று தெரிய வில்லை...
Rate this:
Cancel
Muthukumarkmd Muthukumar - mysore,இந்தியா
24-பிப்-202108:24:52 IST Report Abuse
Muthukumarkmd Muthukumar இவரின் பேச்சுக்கள் அனைத்தும் அருமை சிந்திக்க வைப்பவை சிந்தித்துச் செயல்படும் வகையில் உகந்தவை. இவர் பேசுகையில், நம்முடன், நேருக்கு நேர் அமர்ந்து உரையாடுவது போலவே இருக்கும். தாழ்ந்து போன உள்ளங்களை, குழப்பமான உள்ளங்களை, நிச்சயம், இவரது பேச்சுக்கள் மாற்றும், நேர்மறை எண்ணங்களை நிறையவே தரும். வாழ்க திருமதி ஜெயந்த்ஸ்ரீ அவர்கள், பல்லாண்டு நலமுடனும், வளமுடனும்.
Rate this:
Cancel
24-பிப்-202108:11:45 IST Report Abuse
மோகனசுந்தரம் அலட்டிக்கொள்ளாமல் மிகவும் அருமையாக பேசக்கூடியவர். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X