பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.3.86 கோடி நுண்ணீர் பாசன மானியம்: நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்யலாம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறை சார்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க மானியமாக, 3.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசு வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பாசன நீரை சேமிக்கவும் நுண்ணீர் பாசன மானியத்திட்டம் செயல்படுத்துகிறது. பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறையில்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறை சார்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க மானியமாக, 3.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசு வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பாசன நீரை சேமிக்கவும் நுண்ணீர் பாசன மானியத்திட்டம் செயல்படுத்துகிறது. பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறையில், நுண்ணீர் பாசன திட்ட மானியமாக, 3.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், சிறு, குறு விவசாயிகள், 100 சதவீதம்; இதர விவசாயிகள், 75 சதவீதம் மானியம் பெறலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, ஐந்து ெஹக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் கடந்திருந்தால், மீண்டும் மானியம் பெறலாம். குத்தகை நிலமாக இருப்பின், ஏழு ஆண்டுகளுக்கு சட்டப்படி குத்தகை பத்திரம் பதிந்திருந்தால், மானியம் பெறலாம்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது, தங்களுக்கு விருப்பமான நுண்ணீர் பாசனம் அமைக்கும் நிறுவனத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும், துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், தொட்டி கட்டுதல், மின்மோட்டார் வாங்கவும் மானியம் பெறலாம். இத்திட்டம் தொடர்பாக மேலும் தகவல் பெற, தெற்கு வட்டார உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். உதவி வேளாண் அலுவலர்கள், தொடர்பு எண்கள் வருமாறு: கந்தசாமி - 98429 71591; சண்முகம் - 95006 22248; செல்வம் - 80723 82408; ஆனந்தபாபு - 76676 76077; செல்வராணி - 99947 00883; சரண்யா - 89408 92983.இத்தகவலை, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X