சில வரி செய்திகள்...: சம்பவம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
ஜம்முவில் விவசாயிகள் கைதுஜம்மு: குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியைத் தொடர்ந்து, செங்கோட்டையில் கலவரம் ஏற்பட்டது. இதற்கு காரணமாக இருந்ததாக, ஜம்முவைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் மொஹிந்தர் சிங், 45, மற்றும் மன்தீப் சிங், 23, ஆகியோரை, டில்லி போலீசார்கைது செய்தனர்.பெண்கள் மீது பயங்கரவாத வழக்குபுதுடில்லி: தடை செய்யப்பட்ட, 'தேசத்தின் மகள்கள்' இயக்க

ஜம்முவில் விவசாயிகள் கைது

ஜம்மு: குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியைத் தொடர்ந்து, செங்கோட்டையில் கலவரம் ஏற்பட்டது. இதற்கு காரணமாக இருந்ததாக, ஜம்முவைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் மொஹிந்தர் சிங், 45, மற்றும் மன்தீப் சிங், 23, ஆகியோரை, டில்லி போலீசார்கைது செய்தனர்.

பெண்கள் மீது பயங்கரவாத வழக்கு

புதுடில்லி: தடை செய்யப்பட்ட, 'தேசத்தின் மகள்கள்' இயக்க தலைவர் ஆஷியா ஆண்டிராபி, அவரது கூட்டாளிகள் சோபி பெக்மீதா, நஹிதா நஸ் ரீன் ஆகியோர் மீது, பயங்கரவாதம் மற்றும் தேச துரோக பிரிவுகளில், தேசிய புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை துவங்கி உள்ளது.

பினராயி விஜயனுக்கு சிக்கல்

புதுடில்லி: கேரள முதல்வர் பினராயி விஜயன், 1996ல், அம்மாநில மின்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, கனடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு, 374 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பினராயி விஜயன் உட்பட மூவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ., தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோரியதை அடுத்து, விசாரணை ஏப்., 6க்கு தள்ளி வைக்கப்பட்டது.

தாதாவுக்கு போலீஸ் காவல்

மும்பை: மஹாராஷ்டிராவின் பிரபல தாதா, சோட்டா ராஜனின் கூட்டாளி ரவி பூஜாரி. இவர் மீது, 100க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த, 2016ல் கசாலி ஓட்டல் துப்பாக்கிச் சூடு வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவி பூஜாரி, கடந்த ஆண்டு பெங்களூருவில் கைதானார். போலீசாரின் தொடர் முயற்சியால், நேற்று மும்பை அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மார்ச், 19 வரை அவரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X