பொள்ளாச்சி:பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்தில், மின்மயமாக்கல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதால், வரும், ஏப்ரலில் பணிகள் நிறைவு செய்யப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணி கடந்த, 2019 இறுதியில் துவங்கப்பட்டது. இதில், திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடங்கள் மின்மயமாக்கப்படுகின்றன.இந்த திட்டம், பொள்ளாச்சி பகுதியின் போக்குவரத்து, வர்த்தக, பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய மைல் கல்லாக இருக்கும் என அனைத்து தரப்பினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திட்டத்தில், முதல் கட்டமாக, பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில், 38 கி.மீ., தொலைவுக்கு மின்மயமாக்கும் பணிகள் முதல்கட்டமாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வழித்தடத்தில், மின்கடத்திகள் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. மின்கம்பிகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் நிறுவும் பணியில் பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.இப்பணிகளை அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்து, மின் இணைப்பு கொடுத்து, சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும். அடுத்ததாக, திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கவனம் செலுத்தப்படும், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE